செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றங்கள் உருவானாலும், பெரும்பாலான மக்கள் அங்கு வாழ்வதற்கு சாத்தியமில்லை. விண்வெளி பயணங்களுக்கு ஆகும் செலவு மிக அதிகம். 2011ஆம் ஆண்டில், கனடா நாட்டு கோடீஸ்வரர் லாலிபர்டே விண்வெளிக்குச் செல்ல 35 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தி இருக்கிறார். லாஸ் வேகாஸைச் சேர்ந்த பிக்லோ ஸ்பேஸ் ஆபரேஷன்ஸ் (பிஎஸ்ஓ) நிறுவனம் 2019ஆம் ஆண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்தை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குப் பார்வையிட ஒரு நபருக்கு 52 மில்லியன் டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தது.