தேனில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நமக்கு சிறப்புமிக்க பலன்களை தருகின்றன. காயங்களை குணப்படுத்துவதற்கும் தேன் பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் எழும். ரத்த சர்க்கரை கட்டுப்பாடான அளவில் தக்கவைத்து வருபவர்கள், மிதமான அளவில் தேன் எடுத்துக் கொள்ளலாம். வழக்கமான சர்க்கரையை காட்டிலும் இதன் கிளைஸமிக் இண்டெக்ஸ் அளவு குறைவுதான் என்றாலும், அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.