புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் ஏற்பட்டுள்ள படுதோல்வி காரணமாக புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் என்.ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவரது அமைச்சர் பதவியை பறிக்கவும், மற்றொரு அமைச்சரின் இலாகாவை மாற்றவும் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இதுபோன்று பாஜகவிலும் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்துள்ளார். புதிதாக பொறுப்பேற்று உள்ள திருமுருகனுக்கும் இலாகா வழங்கப்படும் என கூறப்படுகிறது. விரைவில் புதுச்சேரி அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.