பஞ்சாப்: பத்திண்டா மாவட்டத்தில் இருந்து ஹரியானாவின் தோஹானாவுக்கு விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விவசாய அமைப்பை சேர்ந்த 52 பேரை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றுக் கொண்டிருந்தது. அப்பகுதியில் சற்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.