சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம், செல்லப் பிராணிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆர்ட்ரியம் அடுக்குமாடி குடியிருப்பில் செல்லப் பிராணிகள் மலம் கழித்தால் அபராதம் விதிக்கும் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இயற்கை உபாதைகளுக்காக அழைத்துச் செல்ல லிப்ட் பயன்படுத்த தடை என்ற உத்தரவையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.