கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த அலன் அலெக்ஸ் (32) என்பவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பள்ளி மாணவிக்கு, இன்ஸ்டா மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி வந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அந்நபரை பிடிக்க திட்டமிட்ட மாணவியின் பெற்றோர், அவர்களது இடத்திற்கு வரவழைத்தனர். உல்லாச ஆசையால் அங்கு வந்த மருத்துவரை பிடித்த பெற்றோர், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.