சென்னையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திமுக மகளிர் அணி சார்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகும் போது, பெண் ஏன் அங்கிருந்தார்?. அண்ணா என்று அழைத்திருந்தால் விட்டுருப்பானே.. என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகம் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ வேண்டும் என நினைக்கின்றனர். இவர்கள்தான் நமது கொள்கை எதிரி" என்றார்.