தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று (ஜன.03) தொடங்கியுள்ள நிலையில், பரிசுத் தொகுப்பை ஜன.13க்குள் விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜன.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. அதாவது 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை டோக்கன் பெற்றவர்களுக்கும், 13ம் தேதி விடுபட்ட அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.