பட்டாசு ஆலை வெடி விபத்து- 2 பேர் கைது

64பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மேன்கள் கணேஷ், சதிஷ்குமார் ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்நாத் என்ற தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மேலும் ஒருவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ThanthiTV
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி