டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் புதிய உலக சாதனையொன்றை படைத்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய மண்ணில் மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரராகியுள்ளார். BGT தொடரின் 5ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 33 பந்துகளில் ரிஷப் பண்ட் 61 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த உலக சாதனையைப் படைத்துள்ளார்.