குளிர் காலத்தில் ரம் அல்லது விஸ்கி மது வகையுடன் சிக்கன் வகைகளை எடுத்து கொள்வதை பலரும் பழக்கமாக வைத்துள்ளனர். ஏனெனில் இது உடலை சூடேற்றி குளிர்ச்சியை தடுக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. குடிப்பதற்கு காரணம் தேடி இது போன்ற கட்டுக்கதைகள் கூறப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில் குளிர்காலத்தில் மது அருந்துவது உங்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றே கூறப்படுகிறது.