பொதுமக்களின் வசதிக்காக புதிதாக 7ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது, "மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில், நேர முறைப்படி குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதிகள் இயக்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டும் தான். போக்குவரத்துக்கு கழகத்தில் உள்ள பழைய மற்றும் பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதியதாக பேருந்துகள் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன” என தெரிவித்துள்ளார்.