திருச்சியில் இருந்து நேற்று (ஆக.22) இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் இருந்து நல்வாய்ப்பாக 27 பேர் உயிர் தப்பினர். திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்து டயர் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது. தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயனை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.