உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவர் தனது ‘X’ தளத்தில்,“நீங்கள் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து, பல்வேறு விதமான செயலிகளை உருவாக்க விரும்பினால், உங்களின் விவரங்களை, code@x.comக்கு அனுப்புங்கள். எங்களது நிறுவனத்தில் இணைந்து விடுங்கள். நீங்கள் பள்ளிக்குச் சென்றீர்களா?, பட்டம் பெற்றீர்களா? என்பது பற்றி கவலை இல்லை. உங்களது திறமையை மட்டும் காட்டுங்கள்" என பதிவிட்டிருக்கிறார்.