‘மதுரை கலைஞர் அரங்கத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு’ - உதயநிதி உறுதி

69பார்த்தது
‘மதுரை கலைஞர் அரங்கத்தில் விரைவில் ஜல்லிக்கட்டு’ - உதயநிதி உறுதி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜன.16) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சென்று ஜல்லிக்கட்டை பார்ப்பது வழக்கம். மதுரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விரைவில் அரசாணை வெளியிடப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி