உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் விஷால் சாஹ்னி. இவருக்கும் அவரது காதலி அனன்யா சாஹ்னிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விஷால், காதலியை கொலை செய்து, சூட்கேஸில் வைத்து சாலையில் வீசிச் சென்றுள்ளார். கொலைக்குப் பிறகு, விஷால் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு, கங்கையில் நீராடி, பாரம்பரிய சடங்குகளின் ஒரு பகுதியாக தலையை மொட்டையடித்துள்ளார். விஷால் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.