காய்கறி கடைக்கு தீ வைத்த சிறுவன் (வீடியோ)

75பார்த்தது
காய்கறி கடைக்கு சிறுவன் தீ வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், காய்கறி சந்தையில் சிறுவன் ஒருவன் தனது தாயுடன் நடந்து செல்கிறான். அப்போது ஒரு கடையின் உள்ளே சென்றதும் சிறுவன் தன் கையில் வைத்திருந்த லைட்டரை வைத்து சந்தையில் உள்ள காய்கறி கடைக்கு தீ வைக்கிறான். இதனால் காய்கறிகள் தீப்பிடித்து எரிகிறது. இதை கவனிக்கும் அந்த சிறுவனின் தாய் எதுவும் நடக்காதது போல் அச்சிறுவனை அந்த இடத்தை விட்டு நகர்த்தி கூட்டிச் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி