தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (ஜன. 06) தொடங்குகிறது. கவர்னர் உரைக்குப் பின் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்கிறது. இந்நிலையில் இன்று (ஜன. 05) தலைமைச் செயலகம் மற்றும் டிஜிபி அலுவலகத்திற்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து போலீசார் சோதனை நடத்தியதில் மிரட்டலானது வெறும் புரளி என தெரியவந்தது.