அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள பனிப்பாறை தேசிய பூங்காவிற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய இளைஞர் சித்தாந்த் பாட்டீல் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஏரியில் மூழ்கி அவர் உயிரிழந்தார். அவரது உடல் சுமார் 28 நாட்களுக்குப் பிறகு இன்று (ஆக.4) காலை அவலாஞ்சி க்ரீக் அருகே கண்டெடுக்கப்பட்டது. ரேஞ்சர்ஸ் பள்ளத்தாக்கில் ஒரு பாறை அருகே சடலம் மீட்கப்பட்டது. அவரது உடைகள் மற்றும் உபகரணங்களால் இறந்தவர் யார் என அடையாளம் காணப்பட்டது.