மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களைக் கைப்பற்ற, கடந்த தேர்தலை விட, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 வாக்குகள் கூடுதலாகப் பெறுவதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார். மக்களவை தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக ஜபுவாவிற்கு நான் வரவில்லை. ஆனால் “சேவக்” என்ற முறையில், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கவே வந்துள்ளேன்” என அவர் கூறினார்.