நவீன் பட்நாயக் அரசின் மருத்துவ திட்டத்தை நிறுத்தும் பாஜக!

60பார்த்தது
நவீன் பட்நாயக் அரசின் மருத்துவ திட்டத்தை நிறுத்தும் பாஜக!
ஒடிசாவில் ஆட்சிக்கு வந்தால், நவீன் பட்நாயக் அரசாங்கத்தால் 2018-ல் தொடங்கப்பட்ட பிரபலமான சுகாதாரத் திட்டத்தை நிறுத்தி மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவோம் என பாஜக தெரிவித்திருந்தது. பிஜு ஸ்வஸ்த்யா கல்யாண் யோஜனா (பிஎஸ்கேஒய்) தொடர்ந்து அமலில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அதை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில தலைமைச் செயலர் பிகே ஜெனாவிடம் ஆளுநர் ரகுபர் தாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 24 ஆண்டு காலமாக ஒடிசாவில் ஆட்சி செய்து வந்த பிஜு ஜனதா தளம் கட்சியை விழ்த்தி அரியணையை பாஜக கைப்பற்றியுள்ளது.

ஆகஸ்ட் 2018இல் பட்நாயக் அரசாங்கத்தால் ஆண்களுக்கு ரூ.5 லட்சமும், பெண்களுக்கு ரூ.10 லட்சமும் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டது. மாநிலத்தில் 650க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும், ஒடிசாவுக்கு வெளியே 150 மருத்துவமனைகளும் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி