சமீப காலமாக நாம் உண்ணும் உணவுகள் சத்துக்கள் நிறைந்து பாதுகாப்பானதாக உள்ளதா என்றால் அதற்கான பதில் இல்லை என்பதாகத் தான் வரும். அன்று உணவுக்காகவே உழைத்தார்கள். ஆனால் இன்று உழைப்பதும் சுருங்கி விட்டது. அறிவியல் முன்னேற முன்னேற முதலில் பாதிக்கப்பட்டது உணவு வகைகள் தான் எனலாம். நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உணவு வகைகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடல் நிலையைப் பாதித்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. இதை தவிர்க்க இயற்கை உணவுகளை நாடுவதே நல்லது.