கடந்த 24 மணி நேரத்தில் அரக்கோணத்தில் அதிகபட்ச மழைப்பதிவு!

76பார்த்தது
கடந்த 24 மணி நேரத்தில் அரக்கோணத்தில் அதிகபட்ச மழைப்பதிவு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 11 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தலா 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், 27 இடங்களில் நேற்று (ஜூன்6) கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஜூன் மாதத்தின் தொடக்கம் முதலே தமிழ்நாடு எங்கும் பரவலாக மழைப்பொழிந்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.