சிரித்துக்கொண்டே சிறைக்கு சென்ற பாஜக எம்எல்ஏ மகன் (வீடியோ)

61பார்த்தது
சிரித்துக்கொண்டே சிறைக்கு சென்ற பாஜக எம்எல்ஏ மகனின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குஜராத்தில் தலித் மாணவர் அமைப்பின் தலைவரை கடத்தி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜகவின் எம்எல்ஏ ஜெயசின் ஜடேஜாவின் மகன் கணேஷ் ஜடேஜாவை, போலீசார் சிறைக்கு அழைத்து செல்லும் போது சிரித்துக் கொண்டு உற்சாகமாக கையசைத்த படி சென்றார். மேலும், கணேஷ் ஜடேஜாவுடன் இருந்தவர்களும் சிரித்துக்கொண்டே சுற்றுலா செல்வது போல் சிறைக்குள் சென்றனர்.

தொடர்புடைய செய்தி