விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பதிவில், ஒன்றிய அரசின் இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர் ஆகிய பதவிகளில் லேட்டரல் எண்ட்ரி எனப்படும் பின்வாசல் வழியான பணி நியமனங்களைச் செய்ய ஒன்றிய பாஜக அரசு விளம்பரம் செய்துள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிறேன். இது இட ஒதுக்கீட்டை ஒழிப்பது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தையும் சிதைப்பதாகும் என தெரிவித்துள்ளார்.