தருமபுரி மாவட்டத்தில் பிரியாணி கடை ஊழியர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி, இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பணிபுரிந்து வந்த முகமது ஆசிக் (25) என்பவரிடம் மர்ம நபர்கள் பேச்சுக் கொடுத்துக் கொண்டே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், கொலையாளிகள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றன.