கார்கள் விற்பனையில் பென்ஸ் நிறுவனம் சாதனை

84பார்த்தது
கார்கள் விற்பனையில் பென்ஸ் நிறுவனம் சாதனை
ஜெர்மனியின் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி, இந்தியாவில் 2023 - 24 நிதியாண்டில் 18ஆயிரத்து 123 கார்கள் விற்பனை செய்துள்ளது. இந்தியாவின் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் கூறுகையில், "SUV கார்களுக்கான உள்நாட்டு தேவை அதிகரித்துள்ளதால் அதன் விற்பனை முந்தைய ஆண்டை விட 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை மட்டும் இந்நிறுவனம் 5ஆயிரத்து 412 கார்கள் விற்பனை செய்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி