சென்னை உணவு திருவிழாவில் மாட்டிறைச்சியை திட்டமிட்டு புறக்கணித்துள்ளதாக நீலம் பண்பாட்டு மையம் கண்டித்துள்ளது. இதுகுறித்து X தளத்தில், “சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரக்கூடிய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?. பெருமளவிலான மக்கள் பீப் சாப்பிடக் கூடியவர்கள். ஆனால், திட்டமிட்டே ஓர் உணவைப் புறக்கணிக்கப்படுவதை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. உணவு எங்கள் உரிமை” எனக் குறிப்பிட்டுள்ளது.