அடிப்படை எழுத்தறிவு பயிற்சி வழங்குவதற்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த ஜூலை 15-ம் முதல் அடிப்படை கல்வியறிவு வழங்கப்பட்டு வருகிறது. 30,814 தன்னார்வலர்கள் உதவியுடன் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.