லெனோவா யோகா ஸ்லிம் 7ஐ ஆரா எடிஷன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு பிரத்யேக நியூரோ ப்ராசஸிங் யூனிட் (NPU) உடன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை ஆதரிக்கிறது மற்றும் இது சான்றளிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் கோபிலட்+ பிசி ஆகும். இந்தியாவில் லெனோவா யோகா ஸ்லிம் 7i ஆரா எடிஷன் விலை ஆனது ரூ.1,49,990-ல் இருந்து தொடங்குகிறது. இது தவிர, இந்த லெனோவா லேப்டாப்பில் ஸ்மார்ட் ஷேர் வசதியும் உள்ளது. இதில், Wi-Fi 7, ப்ளூடூத் 5.4 மற்றும் தண்டர்போல்ட்4 போர்ட் ஆகியவை உள்ளன.