தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் என்ஜிஓக்கள், தனியார் நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசு பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது, அரசு பள்ளிகளில் என்சிசி, சொற்பொழிவு உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியாட்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.