அதிக விலைக்கு தரமற்ற பாப்கார்ன்.. தியேட்டரில் வாக்குவாதம்

573பார்த்தது
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும் சங்கம் திரையரங்கில் அதிக விலைக்கு தரமற்ற பாப்கார்ன் விற்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திரையரங்கிற்குச் சென்ற பார்வையாளர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு முறையான பதில் கூறாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, “இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது” என ஊழியர்கள் கூறிய நிலையில் தற்போது நடந்த தவறுக்கு என்ன பதில்? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி