ஆவணி சனி பிரதோஷம் - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

78பார்த்தது
ஆவணி சனி பிரதோஷம் - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
மதுரை சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். ஆவணி சனி பிரதோஷத்துக்காக இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலையில் சுந்தரமகாலிங்கம் கோவில் நடை திறந்த நிலையில், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலையேறிச் சென்றனர். மலையில் தங்குவதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி