அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நாளை மறுநாள் (ஆகஸ்ட் 17) காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் 1,045 குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்கள் பயன் பெறும்.