கோவை காந்திபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை மூட சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் பெண் உட்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இநத் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடதக்கது.