ஆசிய ஹாக்கி போட்டி.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா

59பார்த்தது
ஆசிய ஹாக்கி போட்டி.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
8வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முதல் 3 ஆட்டங்களில் முறையே சீனா, ஜப்பான் மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இந்தியா தனது 4வது ஆட்டத்தில் இன்று தென் கொரியா அணியுடன் மோதியது. இதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்தது.

தொடர்புடைய செய்தி