சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் திருமலை என்பவரும் ஒருவர் ஆவார். பூந்தமல்லி தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலைக்கு நேற்றிரவு (ஆகஸ்ட் 25) திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.