தனக்கு அர்ஜுனா விருது வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி குத்துச்சண்டை வீராங்கனை வழக்கு தொடர்ந்துள்ளார். அரியானாவைச் சேர்ந்த வீராங்கனை நீத்து கங்காஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். 2022 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தனக்கு விருது அறிவிக்காதது
அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு முரணானது என அதில் தெரிவித்துள்ளார். நீத்து கங்காஸின் இந்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.