முசிறி அருகே பைக்கில் மணல் கடத்தியவர் மீது வழக்குப்பதிவு
முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளூர் பகுதியில் பைக்கில் மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அலுவலர் திலகா அளித்த தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் மணலை மூட்டைகளாக கடத்திச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.