அரியலூரில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது

61பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே புதுக்குடி பகுதியில் சிலர் சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் லாரியை மறித்து சோதனை செய்தபோது, அதில் சட்ட விரோதமாக 6 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரியலூர் மாவட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (37) சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் (52) ஆகிய 2 பேரையும் கைது செய்து , அவர்களிடமிருந்து 6 ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்குவேன், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி