சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து சுனில் சேத்ரி ஓய்வு

81பார்த்தது
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து சுனில் சேத்ரி ஓய்வு
பிரபல இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் கொல்கத்தாவில் நடைபெறும் குவைத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தனது ஓய்வை அறிவிப்பதாக அவர் தெரிவித்தார். 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது 21வது வயதில் சேத்ரி தனது முதல் சர்வதேச கோலை அடித்தார். இதுவரை 94 கோல்கள் (150 போட்டிகளில்) அடித்துள்ளார். உலகின் மூன்றாவது அதிக கோல் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சுனில் சேத்ரி, பல இளம் தலைமுறை வீரர்களுக்கு ரோல் மாடலாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி