அரியலூர், ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் கொள்முதல் விலையை ரூ. 10 உயர்த்தி தர வேண்டும் 50% மானிய விலையில் மாட்டு தீவனங்கள் வழங்க வேண்டும் வேளாண் பொருளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விலை நிர்ணைப்பது போல் பாலுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.