தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

146438பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் இன்று (நவ.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்!

கரூர்:

கரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருமாநிலையூர், ஆண்டாங்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதே போல புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட புலியூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சனப்பிரட்டி, எஸ். வெள்ளாளப்பட்டி நரிகட்டியூர், தொழில்பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலாராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணன் பட்டி, பொரணி வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினியோகம் இருக்காது.

ராணிப்பேட்டை:

சிப்காட் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதிநகர், பெரியார்நகர், சிப்காட், சிட்கோ, பெல், புளியந்தாங்கல், அக்ராவரம், வானாபாடி, செட்டித்தாங்கல், தண்டலம், அம்மூர், வேலம், அண்ணாநகர், எடப்பாளையம், வாலாஜா நகரம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை:

மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ. புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர்,  
நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம்  2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மதுரை:

சமயநல்லூர் கோட்டத்துக்குட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை கீழ் கண்ட பகுதிகளில் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி, மறவர்பட்டி. சத்திரவெள்ளாளப்பட்டி வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு. சுக்காம்பட்டி. கோணம்பட்டி, சாத்தையாறு அணை, ஏராம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி. குறவன்குளம், ஆதனூர், அச்சம்பட்டி பாலமேடுநகர் ஆகிய பகுதிகள்.

பரமத்தி வேலூர் அடுத்துள்ள நல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம் , கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், கொண்டரசம்பாளையம் ஆகிய பகுதிகள்

வேலூர்:

சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்காக மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அதன்படி சத்துவாச்சாரி பகுதி 1 முதல் பகுதி 5 வரை, வள்ளலார், ரங்காபுரம், சி. எம். சி. காலனி மற்றும் காகிதப்பட்டறை, இ. பி. நகர், அலமேலுமங்காபுரம் தொரப்பாடி, இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், ஜெயில் குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், ஓட்டேரி, பாகாயம், சாஸ்திரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

ஈரோடு: கொடுமுடி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் காலை 9 மணி முதல் 5 மணி வரை கொடுமுடி, சாலைப்புதூர், ராசாம்பாளையம், கணபதி பாளையம், ஒத்தக்கடை வாய்க்கால் செட், சோழ காளிபாளையம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

நெல்லை:

கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

அரியலூர்:

கூத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, BR நல்லூர், ஜெமீன் பேரையூர், ஆத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம். மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

புதுக்கோட்டை:

விராலிமலை வடுகப்பட்டி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வடுகப்பட்டி, வேலூர், கத்தலூர், குளவாய்பட்டி, முல்லையூர், புதுப்பட்டி , அக்கல்நாயக்கன்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பெரம்பூர், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தாப்பட்டி, வளதாடிப்பட்டி, சித்தாம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருச்சி:

ஆதனூர் அம்மாபேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், துவாக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நேருநகர், அண்ணா வளைவு, ஏ. ஒ. எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம். டி சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஸ் ஷிப்பில் சி. செக்டார் மற்றும் எ. இ. ஆர்&பி. எச் செக்டார்,  தேசிய தொழில் நுட்பக்கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி மற்றும் பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி