தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

58பார்த்தது
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 2015-ல் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரின் வீடுகளிலும் 2 மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி