ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நல்லபாம்பு

77பார்த்தது
ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நல்லபாம்பு
தஞ்சை: திருவையாறு தெற்கு வீதி பாரத ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மில் பொதுமக்கள் பணம் எடுத்து சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று (ஜுன் 14) இரவு வங்கி ஊழியர் ஒருவர் உள்ளே சென்ற போது கதவு ஓரத்தில் உள்ள ஒரு ஓட்டையில் நல்ல பாம்பு இருந்ததை பார்த்து திருவையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஏடிஎம்மில் இருந்த நல்லபாம்பை அரை மணி நேரம் போராடி பிடித்து பத்திரமாக சாக்கில் கட்டி அப்புறப்படுத்தினர். இதனால் திருவையாறு கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி