படகு மூழ்கிய விபத்தில் 3 மீனவர்கள் மாயம்

81பார்த்தது
ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகு பழுதாகிய நிலையில் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் படகில் சென்ற ஐந்து பேரில் பாம்பன் பகுதி மீனவர் முகமது ஹனீபா மற்றும் பிரசாத் ஆகிய இரண்டு பேர் கரை திரும்பிய நிலையில் பரக்கத்துல்லா, கலீல் ரஹ்மான், ஆரோக்கியம் ஆகிய மூன்று பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை சக மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி