ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

65பார்த்தது
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சுரக்புரா கிராமத்தில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுமார் 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது. இதையடுத்து, 17 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி