ரூ.38.85 கோடி நிலுவைத்தொகையை செலுத்தாத SRM ஓட்டல்

83பார்த்தது
ரூ.38.85 கோடி நிலுவைத்தொகையை செலுத்தாத SRM ஓட்டல்
ரூ.38.85 கோடி நிலுவைத் தொகையை எஸ்.ஆர்.எம். ஓட்டல் இதுவரை செலுத்தவே இல்லை என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான நிலம் எஸ்.ஆர்.எம். ஓட்டலுக்கு 1994-ல் குத்தகை விடப்பட்டது. குத்தகை ஒப்பந்தமானது 2024 ஜூன் 13ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. திருச்சி ஆட்சியரால் 30 ஆண்டுகளுக்கான குத்தகை தொகை ரூ.47.93 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ரூ.9.08 கோடி மட்டுமே செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி