குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

81பார்த்தது
குவைத் தீ விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று லூலூ குழுமம் தெரிவித்துள்ளது. அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லூலூ குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசப் அலி குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த நிவாரணத்தொகை கேரளாவின் நோர்கா அமைப்பு மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, துபாயில் வசிக்கும் மற்றொரு இந்திய தொழிலதிபரான ரவி, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி