சிபிஎம் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது!

71பார்த்தது
நெல்லையில் சிபிஎம் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட சாதி சங்கத்தைச் சேர்ந்த மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, 5 பெண்கள் உட்பட 13 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம் என நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி